பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 சேக்கிழார் தந்த செல்வம் முரணானவை. அடியார்கள் யாராக இருந்தாலும் என்பது சற்றுக் குழப்பத்தைத் தருவது. அடியார்கள் என்று சொல்லப்படுபவர் ஒரு வகையினர். அவருள் வேறுபாடு இருக்கக் காரணமே இல்லை. வேறுபாடுகள் தோன்றினால் அடியார்கள் தொகுதியில் இருந்து விலக்கப்படும் சூழ்நிலை உருவாகும். இவற்றை யெல்லாம் நன்கு அறிந்த பின்னும் தெய்வச்சேக்கிழார், மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் என்ற சொற்களைப் பெய்வது, வரலாற்றைப் படிக்கும் நம்மை எச்சரிக்கை செய்யவே ஆகும். யாராக இருந்தாலும், அவர் யாரென்ற ஆராய்ச்சியில் புகாமல், அவர்கள் வேண்டுவது எதுவாக இருப்பினும், வேறு வினாவை எழுப்பாமல் தருகின்ற இயல்பினை உடையவர் பெயர் தெரியாத புகார் வணிகர். பார்வையிலேயே இந்த இரண்டடிகளை மறுபடியும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினால் சில அடிப்படை உண்மைகளை மனத்தில் கொள்ள முடியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான சில இயல்புகள் உண்டு. ஒருவர் நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரே ஒரு சிவனடியார் வருகிறார். எதிரே ஒருவர் வருகிறார் என்ற பொதுப்பார்வையும், அவருள் இவர் சிவனடியார் என்ற சிறப்புப்பார்வையும், அந்தச் சிவனடியாருக்குள் இன்ன பெயருடைய இவர்