பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சேக்கிழார் தந்த செல்வம் அவர் சராசரி மனிதரல்லர்; அனைவரிடமும் சமதிருஷ்டி காட்டும் ஞானியும் அல்லர். அப்படி யானால் நேராக வந்தவர் யாராக இருந்தாலும் எப்படி அன்பு காட்டி உபசரிக்க முடியும்? இந்த வினாவிற்கு விடையாகச் சேக்கிழார் பாடலில் முதல் வரியில் நுணுக்கமாக விடை அளிக்கிறார். தெருவில் வந்தவர்களைப் பெயரிட்டு இன்னார், இனியார் என்று வேறுபடுத்திக் காணாமல் அனைவரையும் ஒருபடித்தாகக் காண்பதற்கு மாறர் கையாண்ட வழி என்ன என்பதுதான் முதலடியாகும். வருபவர்களைப் பெயரிட்டு இன்னின்னார் என்று காணாமல் அனைவரையும் ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர்’ என்ற ஒரே முத்திரையை அனைவருக்கும் இட்டுவிட்டார் மாறர். ஆரம் என்பு புனைந்த ஐயர்' என்பது மாறர் வழிபடும் சிவபெருமானைக் குறிக்கும். ஐயர்தம் அன்பர் என்ற சொல்லுக்கு நேரடியாகப் பொருள் கண்டால் சிவனடியார் என்று பொருள்படும். இதற்குச் சிவனடியார் என்று பொருள் கொண்டால் அடுத்த அடியிலுள்ள யாவராயினும் என்ற சொல்லோடு முரண்படும். அதாவது, யாராக இருந்தாலும் அவரை இன்னார், இனியார் என்று பாராமல், சிவனடியார் என்றே மாறர் - கருதினார் என்பதுவே நேரடியான பொருளாகும். எதிரே வந்தவர் சைவர் அல்லாத புறச் சமயத்தாராகக்கூட இருக்கலாம். அந்தச் சமயத்திற்கு