பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 சேக்கிழார் தந்த செல்வம் நடப்பதும், கொடுப்பதும் அவற்றுடைய இயல்பாக மாறிவிடுகின்றன. எந்த ஒன்றும் இயல்பாக மாறிவிட்டால் அங்கே நின்று நிலைத்து ஆராய்வதற்கு இடமே கிடையாது. இந்த அடிப்படையை நன்கு புரிந்துகொண்டால் லொழியக் கொடுப்பதையே இயல்பாகக் கொண்ட புகார் வணிகரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வது கடினம். உடல் உணர்வும் தீண்டாத நிலை அப்படிப் புரிந்துகொள்வதிலும் சில நுணுக்கங்கள் உண்டு என்று எச்சரிக்க வருகிறார் தெய்வச் சேக்கிழார். முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர், என்று கூறிவிட்ட பிறகு, உலகியற் பகையார் என்று ஏன் சொல்ல வேண்டும் என்ற வினாவை எழுப்பினால் ஓர் உண்மை விளங்கும். முன்னர்க் கூறப்பட்ட மூன்று நிலைகளில் மூன்றாவது நிலையை விட்டு நீங்குவது மிகப் பெரிய செயலாகும். அகப் பற்று, புறப்பற்று ஆகியவற்றைத் துறந்தவர்கட்கும் இந்த மூன்றாவது நிலை வருவது கடினம். இதைப் புரிந்துகொள்ள ஒரு சிறு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறுவர் இந்நாட்டவர். வைணவ சமயத்தைச் சேர்ந்த ஒரு பெருஞ்செல்வர், எல்லா வற்றையும் விட்டுத் துறவியாக மாறி ஒரு மடாலயத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார். அவர்