பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 381 பட்டம் ஏற்கும் விழாவைப் பெரிதாகக் கொண்டாடிய அன்பர்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆகியவர்கள் அவரை ஒரு பல்லக்கில் ஏற்றுவித்துத் தாங்களே சுமந்து சென்றனர். பல்லக்கில் அமர்ந்த சுவாமிகள் வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பித் தெருவில் இருக்கும் மாட மாளிகைகளைப் பார்த்துக்கொண்டே புன்முறுவலுடன் சென்றார். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அணுக்கத் தொண்டர் ஒருவர், சுவாமிகள் என்ன பார்க்கிறீர்கள்? என்று வினயத்தோடு கேட்டார். ஜீயர் சுவாமிகள் மந்தகாசத்துடன் இந்த வீடுகள், தோட்டங்கள், காலிமனைகள் ஆகிய அனைத்தும் பூர்வாசிரமத்தில் நம்முடையவை என்று சொன்னாராம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை மனத்துட்கொண்டுதான் வியாக்கியான கர்த்தாவாகிய பெரியவாச்சான்பிள்ளை, எல்லாவற்றையும் விட்டுக் கடைசியாக, விட்டேன் என்ற எண்ணத்தையும் விட்டு வாழ்வதே அகப்புறத் துறவு அடைந்தவர் களின் வாழ்க்கையாகும், என்று கூறுகிறார். இந்த முழுத்துறவை அடைந்தவர்கள்கூட உடம்பு உணர்விலிருந்து (தேகப்பிரக்ஞை) விடுபடுவது கடினம். இந்தத் துறைவு நிலை அடைந்தவர்கள். உடம்பு படும் துன்பத்தைப் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்வார் களே தவிர, அந்த உடம்பு படும் துன்பத்தை அறியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை இவர்களிடம் இராது அண்மைக்காலத்தில்