பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 சேக்கிழார் தந்த செல்வம் திருவண்ணுமலையில் வாழ்ந்த சேஷாத்திரிசுவாமிகள் பல நேரங்களில் பலருடைய உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அந்த மகான் என்ன செய்கிறார் என்பதை அறியாத அப்பாவி மக்கள் அவரை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அவர் உடம்பில் எத்தனை அடி விழுந்தாலும், அடி விழுவது தம்முடைய உடம்பில் என்ற எண்ணமே இல்லாமல் அதை வேடிக்கை பார்த்துச்சிரித்துக் கொண்டிருப்பாராம். இதுதான் மேலே கூறிய மூன்றாவது நிலைக்கும் பல படிகள் மேலே உள்ள தேகப்பிரக்ஞை இழந்த நிலை ஆகும். இப்படிப்பட்டவர்கள் ஏனைய மக்களைப் போலவே உண்டு, உடுத்தி, ஏனைய மக்களோடு தொடர்பு கொண்டு, பேசி, தம் காலத்தைக் கழிப்பர். என்றாலும், என்ன நிகழ்ச்சி நடைபெற்றாலும், யாருடன் பேசினாலும் இவர்கள் பேச்சு வேறு எங்கிருந்தோ யாரிடமிருந்தோ வருகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கும். சராசரியர் வழி அன்று மேலே கூறப்பட்ட கருத்துக்களை ஒரு முறைக்கு, இரு முறையாகப் படித்துச் சிந்தித்து தெளிந்த பிறகு இயற்பகையார் வரலாற்றைச் சேக்கிழார் கூறும் முறையில் பார்த்தால் அதில் வியப்பதற்கோ, வெறுப்பதற்கோ, எள்ளி நகையாடுவதற்கோ எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும் நூற்றுக்