பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 383 கணக்கான ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான மக்களிடையே ஒரு சேஷாத்திரி சுவாமிகள்தான் தோன்றினார். அதேபோலப் புகார் நகர வணிகப் பெருமக்களிடையே ஒருவர் தோன்றினார். ஏனையவர்களைப்போல அவரும் வாணிகம் செய்தார், திருமணம் செய்துகொண்டார்; ஏனையவர்கள் போல வாழ்ந்து வந்தார். ஆனால் தொடக்கத்திலிருந்தே அவருடைய வாழ்க்கை சராசரி மனிதர்கள் செல்லும் வழியில் செல்லவில்லை. பெருவணிகர் ஆதலால் அவர் எதிரே சென்று அவர் வாழ்க்கை சரியாக நடைபெறவில்லை என்று கூற யாருக்கும் துணிவில்லை. ஆனால் அவர்களுடைய மனத்தில் இயற்பகையை பைத்தியம் என்றே முடிவு கட்டியிருந்தனர். சந்தர்ப்பம் வரும் பொழுது அவர்கள் அதனைச் சொல்லிக் காட்டுகின்றனர். இம்மூன்றாவது நிலையையும் தாண்டி தேகப் பிரக்ஞை இல்லாமல் இருக்கின்ற பெரியவர்களை இவ் உலகம் தவறாமல் பைத்தியம் என்றே கூறி வந்துள்ளது. பெரியபுராணத்தில் வரும் அறுபத்து மூன்று அடியார்களில் கண்ணப்பர், இயற்பகையார் என்ற இருவர்மட்டுமே இந்நிலை அடைந்தவர்கள். கண்ணப்பர் இந்நிலை அடைந்தது காளத்தி மலையைக் கண்டதிலிருந்துதான். அதன்பிறகு அவர் வாழ்ந்த காலம் ஆறே நாட்கள்தான். ஏழாவது நாள் பரசிவம் என்ற பெரிய அன்பில் கண்ணப்பன் என்ற சிறிய அன்பு முழுவதுமாகக் கரைந்து விடுகிறது.