பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 சேக்கிழார் தந்த செல்வம் ...” தன்னிடம் இல்லாமல் போனாலும், அடுத்தவரிடம் உள்ளது பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவிடலாம் அல்லவா? இந்த நிலையைப் போக்குவதற்காகவே, 'குறித்து வேண்டிய' என்று கூறுகிறான் வந்தவன். இங்கே குறித்து’ என்ற சொல் இயற்பகையினிடம் முன்னரே உள்ள ஒரு பொருளைச் சுட்டி நிற்கின்றதாகும். உன்னிடத்தில் உள்ள இந்தப் பொருளை வேண்டி வந்தனம்’ என்றால், மன்னிக்க வேண்டும், அதனைத் தர முடியாது’ என்று இயற்பகை கூறிவிடலா மல்லவா? تزي (ت 6 كي மாற்றுவதற்காக, இன்னது என்று குறிப்பிடாமல் 'குறித்து வேண்டிய' என்றுமட்டும் கூறிவிட்டான். இவ்வளவு விரிவாக வந்தவன் பேசியிருக்கத் தேவையே இல்லை. அவனுடைய பேச்சில் உள்ள துணுக்கத்தையும் மறைபொருளையும் அறிந்து கொள்ளும் நிலையில் இயற்பகை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் அவர் சஞ்சரித்துக் கொண்டிருக் கின்ற உலகத்தில் இந்தச் சொற்கள் காதில் சென்று விழுகின்றன. - எனவே, மிக எளிதாக இயற்பகையார் விடை கூறி விடுகிறார். வந்தவன் குறித்துவேண்டிய என்று கூறியதால், “தாங்கள் எதனைக் குறிப்பாக வேண்டுகிறீர்கள் என்று கேட்டிருக்கலாம். சாதாரண நிலையில் உள்ள எந்த மனிதனும் இதனைத்தான்