பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 சேக்கிழார் தந்த செல்வம் இயற்பகையார் இப்பாடலில் பயன்படுத்திய சொற்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். 'யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்'- எந்த ஒரு பொருளாக இருப்பினும் என்னிடத்து இருக்கிறது என்றால், அது சிவனடியார்களின் உடைமை என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என்னிடம் உள்ள எல்லாவற்றிற்கும் உடைமையாளர்கள் சிவனடியார்களே ஆவர். 'உடைமை என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டதால், சிவனடியார் களுக்குச் சொந்தம், சிவனடியார்களே உரிமை யாளர்கள் என்ற பொருளையெல்லாம் விட்டுவிட்டு, என்பால் உள்ள நிலையியற் பொருள், இயங்கியற் பொருள், உயர்திணைப் பொருள், அஃறிணைப் பொருள் ஆகிய எதுவாக இருப்பினும் அவை என்பால் இருக்கின்றன என்பதால் நான் அவற்றின் உரிமையாளன் என்று தயவுசெய்து யாரும் நினைந்துவிட வேண்டாம். உடைமையாளர்கள் என்பவர்கள், மாதவன்தன் அடியார்கள். மேலே கூறப்பெற்ற நால்வகைப் பொருளில் எதுவாக இருப்பினும், அவை அவர்தம் உடைமைகள், @oujjī)(5 (p(up 2 famoud (absolute ownership) பெற்றவர்கள் சிவனடியார்களே ஆவர் என்பது கருத்து. அப்படியானால் இயற்பகையாரின் நிலை என்ன ? மிக அழகாக இயற்பகையே விடை கூறுகிறார். 'யாதும் ஒன்றும் என்பக்கல் உண்டாகில்’ என்று கூறுவதால், தம்பால் இருக்கின்ற பொருள் களைக்கூட அவர் அறிந்துவைத்தவராகத் தெரிய