பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் , 389 வில்லை. உண்டாகில்’ என்ற சொல், என்பால் இருக்குமேயானால், என்ற பொருளையே தரும். சிவனடியார்களின் இந்த உடைமைக்குக் காவலராகவோ பாதுகாவலராகவோ முகவராகவோ கூடத் தாம் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. இம் மூன்று முறைகளில் எந்த முறையிலாவது இயற்பகையார் இருந்திருந்தால் தம் அதிகார எல்லைக்குள் இருக்கும் நால்வகைப் பொருளையும் அவர் கணக்கிட்டு அறிந்திருக்க வேண்டும். இந்தப் பொறுப்பைக்கூட அவர் ஏற்றுக்கொள்ளாமையின், 'யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் என்று கூறிவிட்டார். நம்மிடம் அளவுகருவி இல்லை தொடக்கத்திலிருந்து இதுவரை நடந்தவற்றைக் கவனித்தாலே இயற்பகை, இந்த உலகிடை வாழும் எந்த மனிதரையும்போன்றவர் அல்லர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியும். வேறு ஈடு இணை சொல்ல முடியாத, தேகப்பிரக்ஞைகூட இல்லாமல் சுற்றிவரும் ஒரு மனிதரையோ அவர் செய்யும் செயல்களையோ நம்முடைய எல்லைக்குட்பட்டு, நாம் பயன்படுத்தும் அளவுகோள்களைக் கொண்டு அளவிட்டு அறிய முற்படுவது பெருந்தவறாக முடியும். நாம் அளவிட முற்படும் எந்த அளவு கருவியும் நம்மால் கண்டு, கேட்டு, உற்று அறியும் உலகியல் எல்லைக்குள் இயங்குவனவாகவே இருக்கும். எனவே,