பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 சேக்கிழார் தந்த செல்வம் இயற்பகையாரை நினைக்கும் பொழுதோ அவர் செய்த செயல்களைப்பற்றி ஆராய முற்படும் பொழுதோ அவர் இந்த உலகியலுக்கு முற்றிலும் வேறானவர் என்ற கருத்தை நாம் மறந்து விடக்கூடாது அதற்காகவே முதற் பாட்டிலேயே, இவர் உலகியல் பகையார் என்று சேக்கிழார் எச்சரிக்கை தந்துள்ளார். அதை மறந்துவிட்டு'மனைவியை ஒருவன் கேட்டால் கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் புகுவது அறியாமையின் எல்லை ஆகும். இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படையே, ஒருவனுக்கு உரிமை உடைய மனைவி என்பவளைப்பற்றியதே ஆகும். ஐம்பொறிகளும் ஐந்து புலன்களும் நான்கு அந்தக்கரணங்களும் பஞ்ச பூதங்களால் ஆன உடம்பும் சேர்ந்துள்ள ஒரு சராசரி மனிதனை எடுத்துக்கொண்டால் அவனுடைய அகங்காரத்தின் விளைவாக உள்ள 'அவன்’ எண்ணிக்கையில் முதலாவதாக நிற்பவன். அந்த ஒன்று என்ற எண்ணிக்கையின்பின் வரும் அவன் மனைவி மக்கள், உறவுகள், அவனுடைய சொத்துக்கள் ஆகிய அனைத்தும் பூஜ்யங்களாக நின்று அந்த ஒன்றை வலிமைப்படுத்தும் உரிமைப் பொருள்களாகும். மனைவி, மக்கள் என்ற உறவுகள்-அவற்றுக்குரிய முறைமைகள், கடமைகள் என்பவையெல்லாம் ஒன்று என்று எண்ணப்படும் அந்தத் தலைவன் இருக்கின்ற வரையில்தான். அவன் என்ற ஒருவன் இருந்தால்