பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 391 தானே, அவன் மனைவி, அவன் மக்கள் என்ற உறவுகள் விரியும். அந்த ஒருவன் இறந்துவிட்டாலோ, உயிரோடு இருந்தும் நீண்ட நாட்களாக நினைவிழந்த நிலையில் (deep coma) இருந்துவிட்டாலோ, மனம் பேதலித்த நிலையில் இருந்தாலோ இவை அனைத்தையும் கடந்து வேறு எங்கோ அவனது மன நிலை பதிந்துவிட்டாலோ அப்பொழுது அவனுடைய மனைவி, மக்கள், பொருள் என்ற சொற்கள் அவனைப் பொறுத்தமட்டில் அர்த்தமற்ற சொற்களாகும். இந்த மனநிலையில் உள்ளவனுக்கு மனைவி என்ற சொல்லும், மக்கள் என்ற சொல்லும் தரையில் கிடக்கும் கற்கள் என்ற சொல்லும், புல் கட்டு என்ற சொல்லும் வேறுபாடற்ற சொற் கூட்டங்களாகும். இந்த நிலையில் உள்ள ஒரு மனிதனை, மனைவியைப் பிறருக்கு ஈந்தவன் என்று பேசுவதோ, எள்ளி நகையாடுவதோ அறிவினம். மேலே உள்ள வாக்கியத்தில் மனைவி என்ற சொல்லை எடுத்து விட்டு, மடியில் இருந்த கூழாங்கற்களை, தன் இடையில் கட்டியிருந்த துணியை, தான் உண்டு கொண்டிருந்த உணவை என்ற சொற்களைப் பொருத்திச் சொன்னாலும் அதே பொருளைத்தான் தரும். காரணம், இயற்பகையைப் பொறுத்தமட்டில் கட்டிய மனைவிக்கும் வீட்டில் இருந்த சாமான்களுக்கும் வாணிகம் செய்ய வைத்திருந்த