பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சேக்கிழார் தந்த செல்வம் பொருட்களுக்கும் அவர் எந்த வேறுபாடும் கண்டதில்லை. இத்தகைய மனநிலையைத்தான் கண்ணப்பர் புராணத்தில் யாக்கைத் தன் பரிசும், வினை இரண்டும் என்ற பாடல் வரிகள் மூலம் (பெ.பு-803) சேக்கிழார் பேசுகிறார். ஆழ்மனத்தைத் தட்டி எழுப்பிட வந்தவன் என்ன கேட்டான் என்று கூறவந்த சேக்கிழார் மிக அழகாகப் பின்வரும் பாடலில் கூறுகிறார். மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து துய தொண்டனார் தொழுதுஉரை செய்வார். • (பெ. பு-410) இந்த இரண்டு அடிகளில் இயற்பகை மனநிலையை நுணுக்கமாக விளக்குவதற்குரிய பல சொற்கள் பெய்யப்பட்டுள்ன. மன்னு காதல் உன் மனைவியை’ என்று வந்தவன் சொல்வது, இயற்கையின் மனத்தின் ஆழத்தில் எங்காவது ஒரு மூலையில் தான் என்ற அகங்காரமோ, தன்னுடைய அழகிய இளம் மனைவி