பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 393 என்ற மமகாரமோ ஒளிந்துகொண்டிருந்தால் அதனைத் தட்டி எழுப்பவேயாகும். . ஒளிவு மறைவின்றி இதற்கடுத்தபடியாக, எதிரே சொன்ன போதிலும் என்ற சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சாதாரணமானவனும் அறிவு விளக்கம் பெறாதவனும் கல்வி கேள்விகளில் அதிகம் தோயாதவனும் ஆகிய ஒரு சராசரி மனிதனின் எதிரே உன் மனைவியை வேண்டி வந்தேன்’ என்று கூறியிருப்பானேயாகில், கூறினவன் கதி என்னவாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். எனவேதான் சேக்கிழார்-எதிரே சொன்ன போதிலும், ஒளிவு மறைவாகக்கூட இல்லாமல் இயற்பகையின் முகத்துக்கெதிரே கூறிய போதிலும் என்று கூறுகிறார். - எதிரே நிற்கும் அந்தணன் இவ்வாறு கூறியவுடன் இயற்பகை என்ன செய்தர்ர் என்பதைப் பின்வரும் வரிகளில் சேக்கிழார் கூறுகிறார். "-முன்னையின் மகிழ்ந்து - தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்.” - (பெ. பு-410) "இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு." - (பெ. பு-41)