பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 சேக்கிழார் தந்த செல்வம் எந்த ஒரு சராசரி மனிதனும் எந்தச் சொல்லைக் கேட்டால் சினத்தின் உச்சிக்குச் சென்றுவிடுவானோ, அத்தகைய சொல்லை, இயற்பகையின் எதிரே அந்தணன் சொல்லியபொழுது, தூய தொண்டனார் ஆகிய இயற்பகை மகிழ்ந்தாராம். மகிழ்வதற்குரிய காரணம் யாது? மூன்றாவது, நான்காவது நிலைகளில் உள்ள பக்தர்கள், அடியார்கள், தொண்டர்கள் எதிரே உள்ள சிவனடியார்கள் எதை விரும்பிக் கேட்டாலும் அதைக் கொடுப்பதுதான் தம் வாழ்வின் குறிக்கோள் என்று கருதி வாழ்ந்தவர்கள். கேட்கப்பட்ட பொருள் மணமகளின் கூந்தலாக இருப்பினும் (மானக்கஞ்சாறனார்) பெற்ற பிள்ளையை அறுத்துக் கறி சமைப்பதற்காக இருப்பினும் (சிறுத் தொண்டர்) ஒரு சிறிதும் மனம் துளங்காமல் அதனைத் தருவதுதான் இவ் வடியார்களின் வாழ்க்கைக் குறிக்கோளாகும். இந்த வரிசையில் இவர்களைவிட ஒரு படி முன்னே நிற்பவர் இயற்ப்கை நாயனார் ஆவார். - - - - “மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என்ற சொற்கள் எதிரே நிற்பவன் வாயிலிருந்து வந்தாலும்-உன் மனைவி, அவளை வேண்டி வந்தேன்’ என்ற இரண்டு கருத்துக்கள்தான் இயற்பகை செவியில் படுகின்றன.