பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 சேக்கிழார் தந்த செல்வம் கலக்கமும் தெளிவும் இதன்பிறகு நடந்தவற்றைச் சேக்கிழார் சொல்லிக் கொண்டு செல்வதில் அன்றைய சமுதாய நிலையை நாம் அறியமுடிகிறது. வீட்டினுள் இருக்கும் மனைவியிடம் சென்று, இயற்பகை, 鲨蝶 இன்று உனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன்' என்ன மதுமலர்க்குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்தபின், மற்று இது மொழிவார். (பெ. பு-41) மேற்கண்ட அடிகளில் இயற்பகையாரின் மனைவியைப் பற்றிடக கவிஞர் ஒரு விளக்கம் தருகிறார். எவ்விதமான மனமாறுபாடும், குழப்பமும் இல்லாமல் தம்மிடம் உள்ள சாமான்களை எடுத்துக் கொடுக்கும் அதே மனநிலையில், பெண்னே! இந்தத் தவவேடம் பூண்ட அந்தணனுக்கு உன்னை நான் தந்துவிட்டேன். இவ்வாறு கூறும் இயற்பகையினிடம் எவ்விதக் குழப்பமும் இல்லை. - இச்சொற்களைக் கேட்ட அந்த அம்மையாரின் எதிர்ச் செயல் என்ன என்பதைக் கவிஞர் ஒன்றரை அடிகளில் கூறிவிடுகிறார். எந்தக் கணவனும் சொல்லத் துணியாத சொற்களைத் தம் கணவர் பேசி விட்டதை அம்மையார் காதால் கேட்டுவிட்டார். இத்தனை நாட்கள் அவரோடு வாழ்க்கை நடத்திய