பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் . 397 அம்மையாருக்குக் கணவரின் மனநிலை எத்தகையது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே ஆகும். தம் கணவர் ஏனைய வாணிகர்களைப் போன்று ஒரு சராசரி வணிகர் அல்லர், உயர்ந்த மனநிலையில் உள்ள சிவனடியார் என்பதை அம்மையார் அறிவார். அந்த அம்மையார்கட்ட இயற்பகை இந்த அளவுக்குச் செல்வார் என்பதைக் கற்பனை செய்துகடப் பார்த்ததில்லை. ஆனாலும் ஒரு வினாடி நேரத்தில் அதுவும் நடந்துவிட்டது. அந்த வினாடியில் அம்மையாரின் உள்ளக்கிடக்கை யாது என்பதைக் கூறவந்த சேக்கிழார், கலங்கி’ என்ற ஒரே சொல்லில் அவரது மனநிலையைக் கூறிவிட்டு, அந்த ஒரு வினாடிநேரக் குழப்பத்திற்குப் பிறகு அவருக்குத் தெளிவு ஏற்பட்டது என்பதையும் குறிக்கிறார். கலக்கமும், தெளிவும் அடுத்தடுத்து வருவதால் இயல்பான மனித மன நிலையில் உள்ளவர் என்பதைக் கவிஞர் காட்டுகிறார். கணவர் எந்த நிலையிலும் கலக்கமடையாத தெளிவான மனநிலையில் உள்ளவர். மனைவியார் ஒரு வினாடி மனங்கலங்கி, பின் தாமே தெளிவடையக் கூடிய நிலையில் உள்ளவர் என்பதை அறிகின்றோம். சுற்றத்தார் செயல் அம்மையாரை அழைத்துக்கொண்டு அவ்வூர்த் தெருவழியே வருகின்றார் அந்தணர். இதற்குள் செய்தி ஊர்முழுதும் பரவிவிட்டது. இயற்பகை