பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 சேக்கிழார் தந்த செல்வம் பெருவணிகன் ஆதலாலும் அவரது இனத்தார் ஊரைச் சுற்றியிருப்பதாலும் ஒரு சூழ்நிலை உருவாகிறது. சிவனடியார் எதை விரும்பினாலும் தர வேண்டும் என்ற குறிக்கோள் சுற்றத்தாரிடை இல்லை. அப்படியே ஏதாவது தருவதானாலும் பொன், பொருள், பசிக்கு உணவு என்ற முறையில் இருக்க வேண்டுமே.தவிர ஒருவன் தன் #: @L_6ö) LDôolif அதாவது மனைவி போன்றவர்களைக் கொடுப்பது அடாத செயலாகும். ஆகவே, நடந்தவற்றைக் கேள்விப்பட்ட இயற்பகையின் சுற்றத்தார் அந்தணனை வளைத்துக் கொண்டு, பேசுவது சமுதாய, மக்களுக்குப் பொருத்தமானது என்பதைச் சேக்கிழார் காட்டுகிறார். மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் -- இனையது ஒன்று யாரே செய்தார்? இயற்பகை பித்தன் ஆனால் புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்' என்று துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார். (பெ. பு-416) இப்பாடலின்படி பார்த்தால், இயற்பகையின் கற்றத் தாரும் அவர் மனைவியின் சுற்றத்தாரும் இயற்கைக்கு மாறான இயற்பகையின் வாழ்க்கைமுறையைக்