பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சேக்கிழார் தந்த செல்வம் சிவனடியார்கள் என்ற குறுகிய எல்லைக்குள் இல்லாமல் பசியால் வருந்தும் எல்லா உயிர்களையும் மாறர் போன்ற பெரியவர்கள் ஒன்றாகவே பாவித்து உபசரித்தார்கள் என்பது விளங்கும். இந்தப் பாடலின் முதலடிக்கு வேற்றுமை உருபுகளை விரித்தும், மாற்றியும் பொருள் கொள்ளாமல் நேரிடையாகவே பொருள் கொள்ளலாம் என்ற கருத்தை மருத்துவ நிபுணர் டாக்டர் என். சிவராசன் வெளியிடுகிறார். ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்ற தொடருக்கு நேரே வந்தவர்கள் என்று பொருள் கொள்ளாமல், இத்தொடரை மாறருக்கே ஏற்றி விடலாம். யாராக இருந்தாலும் இவர், அவர்களை வேறுபாடு பாராட்டவில்லை. ஏனென்றால், இறைவனுக்கு அன்பராகிய இவர் (ஐயர்தம் அன்பர்) அத்தன்மை காரணமாக எல்லா உயிர்களிலும் எல்லா மனிதர்களிடமும் இறை வனையே கண்ட காரணத்தால் வேறுபாடு காணாமல் உபசரித்தார். இறைவனிடம் முழுமையாக அன்பு செலுத்தி அகங்கார, மமகாரங்களைக் களைந்தவர்கட்கு எல்லா உயிர்களும், மனிதர்கள் உள்பட இறைவடிவாகவே தோன்றும் ஆதலால் வேறுபாட்டிற்கு இடமே இல்லை. இந்த அடிப்படையில் LI ITL @Ö)®) நோக்கினால், "எலும்பை மாலையாக அணிந்த உயர்ந்தவனான சிவபெருமான் உடைய அன்பராக (மாறர்) இருந்த காரணத்தால் (தன்மையால்) எதிரில்