பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 399 கண்டு அவரைப் பயித்தியம் என்று முத்திரை குத்திவைத்து விட்டார்கள் என்று அறியமுடிகிறது. அவர்களுடைய அகராதியில் அகங்கார, மமகாரமற்ற சிவனடியார் ஒருவர் பைத்தியம் என்றே கருதப்பட்டார். அவர்களால் பைத்திய்மென்று கருதப்பெற்ற இயற்பகையார் தனிப்பட்ட முறையில் என்ன செய்தாலும் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை. ஆனால், அவருடைய மனைவி என்று சமுதாயம் குறித்துவைத்துள்ள ஒருவரை இயற்பகையார் வேறொருவருக்குக் கொடுத்துவிட்டார் என்றால்-அந்தச் சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இயற்பகையார் தம் மனைவிபற்றி என்ன நினைத்தார்-அவர் மனைவி, கணவரைப்பற்றியும் அவருடைய செயல்கள்பற்றியும் என்ன . நினைத்தார் என்பவைபற்றியெல்லாம் அந்தச் சமுதாயம் கவலைப் படவில்லை. மனைவியை ஒருவர்க்கு ஈவதனால் ஏற்படும் அவமானம் கணவனுக்குமட்டுமே என்று நினைக்கின்ற இற்றைநாள் சமுதாயத்திலும் முற்றிலும் மாறுபட்டதாகும் அன்றைய சமுதாயம். இயற்பகைக்கும் அவர் மனைவிக்கும் இடையே நடந்த இந்த விவகாரம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். அதை எப்படியாவது போக்க வேண்டும் என்ற கருத்தால் போர்க் கருவிகளோடு சுற்றத்தார். அந்தணனை இடைமறித்தார்கள். ...,'