பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 சேக்கிழார் தந்த செல்வம் இயற்பகையார் வெற்றி அந்தணர் வேடத்தில் வந்த இறைவன் சுற்றத்தார் கோபாவேசத்தைக் கண்டு அஞ்சினவன்போலப் பாசாங்கு செய்ய, இயற்பகை தாம் ஒருவராகவே நின்று, எதிர்த்தவர்கள் பலரையும் ட்ெட்டிச் சாய்த்தார். இங்கேயும் ஓர் உண்மையை நாம் அறிய வேண்டும். படைக்கலங்களோடு எதிர்த்து நின்ற சுற்றத்தார் பலரையும் இயற்பகை ஒருவராகவே வென்றார் என்றால், அது எவ்வாறு முடிந்தது? சமுதாயப் பழி என்ற ஒன்றைப் போக்குவதற்காகவே போரிட வந்தனர் சுற்றத்தார். சிவனடியார் வேண்டுவதைச் செய்துதருவதே தம் வாழ்க்கைக் குறிக்கோள் என்ற கருத்துடன் போரிட்டவர் இயற்பகையார். எனவே, அவர் வெல்வது என்பது இயற்கை யாகிவிட்டது. - அந்தணன் கணிப்பு : 'பொய்தரும் உள்ளம் இல்லான் _ ، ‘‘ ۔ ۔ ۔ இதன்பிறகு ஒரு நிகழ்ச்சியைப் பேசுகிறார் சேக்கிழார், திருச்சாய்க்காட்டின் எல்லைவரை அந்தணனை அழைத்துச் சென்றார் இயற்பகையார். இப்பொழுது அந்தணன் இயற்பகையாரைப் பார்த்து இனி நானே போய்க்கொள்ளுகிறேன், நீ மீண்டு செல்வாயாக' என்று கூறினான். அதனைக் கேட்ட இயற்பகையார், அந்தணன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் புகாரை நோக்கி மீளப் போனார். அவர் சில நூறு அடிகள்