பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 401 சென்றபொழுது அந்தணனாகி நின்றவன் என்ன பேசினான் என்பதைத் தெய்வச் சேக்கிழார் இதோ கூறுகிறார்: 'பொய்தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான்' என்று மெய்தரு சிந்தை யானை மீளவும் அழைக்கல் உற்றான்.

- (டெ பு-43)

"இயற்பகை முனிவா ஒலம் ஈண்டு நீ வருவாய் ஒலம்! அயர்ப்பு இலாதானே ஒலம்! அன்பனே ஒலம்! ஒலம்! செயற்கு அருஞ் செய்கை செய்த தீரனே ஒலம்' என்றான். (பெ. பு-432) இந்த அடிகளில் அந்தணனாகி நின்ற இறைவனே. இயற்பகையாரை எடை போட்டதுபோல் சில சொற்கள் வெளிவருகின்றன. பொய்தரும் உள்ளம் இல்லான், பார்க்கிலன் போனான்’ என்று அந்தணன் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்வதாக இத் தொடரை அமைக்கின்றார் சேக்கிழார். பொய்தரும் உள்ளம் இல்லான்' என்பதால் இயற்பகையாருடைய புறமனம், அகமணம் இரண்டிலும் வாய்மையே