பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 சேக்கிழார் தந்த செல்வம் நிறைந்திருக்கிறது என்பதும் ஒரு வினாடிகூடப் பொய் அதனுள் நுழைந்ததில்லை என்பதும் கூறினாராயிற்று. 'பார்க்கிலன் போனான்’ இனி பார்க்கிலன் போனான்’ என்ற சொற்கள், மனிதனாகப் பிறந்து அந்த வினாடிவரை மனிதனாகவே வளர்ந்துவிட்ட இயற்பகையார், மனிதனாக வாழ்கின்றவர்கள், கற்பனையில்கூடக் கடக்க முடியாத ஓர் எல்லையைக் கடந்துவிட்டார் என்பதை அறிவுறுத்தினாராயிற்று. எந்தச் சராசரி மனிதனும்-ஏன் மிக உயர்ந்த ஞானியும்கூடபல்காலம் தன்னிட்மிருந்த ஒரு பொருளை ஓரிடத்தில் விட்டுச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்தப் பொருளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்லும் பழக்கம் உண்டு என்பதை நாம் அறிவோம். இடுகாட்டில் தீமூட்டிச் செல்கின்றவர்கள்கூடக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுதலை பெறுவது கடினம். ஆகவே, திரும்பிப் பார்க்காமல் பேர்'என்று காட்டில் உடனிருப்பவர்கள் கூறும் பழக்கம் இன்றும் நம்மில் உண்டு. பழகிய பொருளை விட்டுச் செல்லும்போது, திரும்பிப் பார்க்காமல் போவது என்பது எந்த மனிதனுக்கும் இயலாத ஒரு காரியமாகும். இப்பொழுது தம்மோடு பல்லாண்டுகள் பழகியதோடு, மனைவி என்ற நிலையிலும் இருந்த ஒருத்தியை