பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 சேக்கிழார் தந்த செல்வம் அழைக்கப்பட்டான். ஞானியாக இருந்தும்கூட ஒரு பெண்ணை சீதை எடுத்து வளர்த்த காரணத்தால் அவளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டான் சனகன். அப்படிப்பட்ட ᏧjöᏊᎣl6Ꮱ6ajᏧᏂ.L_. இயற்பகைக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்பதைக் குறிக்கவே இயற்பகை முனிவா ஒலம் என்று குறிப்பிடுகிறார் கவிஞர். 'அயிர்ப்பிலாதான் மனிதருக்குள்ள இயல்பான மற்றொரு குணம் இங்குச் சிந்திக்கத்தக்க தாகும். நமக்குரிய ஒரு பொருளை ஒருவர் கேட்டு, நாம் தந்துவிட்டால் அந்தப் பொருளை அவர் எவ்வாறு பயன் படுத்துகிறார் என்பதை அறியவேண்டும் என்ற அவா மனத்தில் தோன்றுவது இயல்பே ஆகும். அப் பொருளை அவருக்கே உரிமையாகக் கொடுத்து விட்டால்கூட, என்ன செய்வாரோ: தக்கபடி பயன்படுத்துவாரோ என்ற ஐயம் மனத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இது மனிதருக்குள்ள இயல்பு. இதனையும் இயற்பகை வென்றுவிட்டார். என்பதைக் குறிக்கவே, அயிர்ப்பு இலாதானே ஒலம் என்று கூறுகிறார். அயிர்ப்பு என்ற சொல்லுக்குச் சந்தேகம் என்ற பொருள் உண்டு. இதற்கு முந்தைய பாட்டில் திரும்பிப் பார்க்காமல் போகிறான் என்று கூறிய அந்தணன், அதற்கு விளக்கம் தருபவன் போல அயிர்ப்பிலன் என்று பேசுகிறான். திரும்பிப் பாராமல் போதல்