பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் : 405 உடம்பின் செயலாகும். மனத்துள் சந்தேகத்தை வைத்துக்கொண்டு, ஊரார் மெச்சுவதற்காக திரும்பிப் பாராமல் போகிறவர்கள் உண்டு. இயற்பகையும் இந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற் காகவே அயிர்ப்பு இலாதானே ஒலம்-ஒரு கடுகளவு சந்தேகமும் இல்லாதவனாகச் செல்கிறான் என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். இந்த அடியில் வரும் 'அயிர்ப்பு என்ற சொல்லுக்கு மாறுபட்டு அயர்ப்பு என்னும் சொல்லைப் பாடமாகக் கொண்ட இறைவனை மறவாதவர் என்று சிலர் பொருள் கூறியுள்ளனர். இவ்வளவு தூரம் வரலாற்றைக் கூறிய பிறகு, இயற்பகை இறைவனை மறவாதவர் என்று சொன்னால் அவை பொருளற்ற சொற்களாக முடியும். அயிர்ப்பு என்பதே சிறந்த பாடமாகும். செயற்கருஞ் செய்கை செய்த தீரன்’ இவ்வளவும் கூறிய பிறகும், இயற்பகையின் செயலின் நுணுக்கத்தை, தத்துவத்தைப் புரியாதவர்கள் பலர் இருப்பார்கள் என்பதை அறிந்த அந்தணன், புரியாதவர்களுக்கும் புரியும்படியாக ஒரு தொடரைப் பயன்படுத்துகிறான். அதுதான், செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஒலம்! என்பதாகும். மனிதன் உள்பட உயிர்கள் அனைத்தையும் படைத்த பரம்பொருள், தன்னுடைய படைப்பில் ஒவ்வோர் உயிரின் ஆற்றலுக்கும் ஒர் எல்லை வகுத்திருக்கும் அல்லவா?