பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 சேக்கிழார் தந்த செல்வம் ஏதாவது ஒர் ஆன்மா அந்த எல்லையைக் கடந்து சென்றால் படைத்த இறைவனே மகிழ்ச்சி அடைவான். உலகியல் முறையில் மனம் ஒப்பி மனைவியை வழங்குதல், மனித ஆற்றலுக்கு அப்பாற் பட்ட செயலாகும். அதை ஒருவன், தான் செய்யும் தொண்டில் ஒரு பகுதி என்று கருதிச் செய்கின்ற பொழுது, அவன் செயற்கருஞ் செயல் செய்தவனாகி விடுகிறான். அவனைப் பொறுத்தமட்டில் அது சாதாரணச் செயல். எதிர்நின்று அதனைக் காணுகின்ற அந்தணன் உள்பட நம்மைப் பொறுத்த மட்டில் அது செயற்கருஞ் செயலே ஆகும். -- ஐந்தாம் நிலை அடியவர்கள் இனி, இயற்பகை வரலாற்றைக் கற்கப்போகின்றவர்கள் முன்னர்க் கூறப்பெற்ற நால்வகை நிலைகளையும் மனத்துட் கொள்வதோடு இந்த நான்கு நிலை களையும் கடந்து ஐந்தாவது நிலையில், அதாவது தேகப்பிரக்ஞை அற்ற நிலையில் இருவர் பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பதையும் அறிதல் வேண்டும். இந்த நுட்பத்தை அறிந்து இவர்கள் வரலாற்றைப் பாடத் தெய்வச் சேக்கிழாரை அல்லாமல் வேறு யாருக்கும் இது இயல்வது ஒன்றன்று என்பதையும் அறிதல் வேண்டும். కుశ శ్రీశ్రీ