பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 சேக்கிழார் தந்த செல்வம் சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் பாடியதை, கொஞ்சம் விரிவாக நம்பியாண்டார்நம்பி பாட, •916ᏈᎧᎫ இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார் தம்முடைய பெரியபுராணத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடினார். எனவே இதில் அவர் விருப்பம்போலக் கதைகளை மாற்றவோ அல்லது வேறு திருத்தங்கள் செய்யவோ உரிமை இல்லாமல் போய்விட்டது. உள்ள கதைகளை அப்படியே வைத்துக் கொண்டு தம்முடைய கற்பனையைச் சேர்த்து மிகச் சிறந்த முறையில் பாடினார் என்பதில் ஐயமில்லை. அந்தக் காப்பியத்தின் குறிக்கோளாக இருப்பது தொண்டு: அதற்கு அடுத்தபடியாக இருப்பது இறையன்பு: அதற்கடுத்தபடியாக இருப்பது குறிக்கோள் என்றெல்லாம் முன்னர் காணப்பட்டது. இனி இந்தப் பெரியபுராணத்தை அநுபவிக்க வேண்டுமானால் ஒரு சிக்கல் ஏற்படும். ஏனைய சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களை அநுபவிப்பது போல பெரியபுராணத்தை அநுபவிப்பது கஷ்டம். இதில் சொல்லப்பட்ட வரலாறுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்றாலும் பலகாலத்தில் வாழ்ந்த பலருடைய வாழ்க்கையை அது பேசுவது என்றாலும் அடிப்படையாக இருப்பது தொண்டு உணர்ச்சியும், குறிக்கோள் வாழ்க்கையும், இறையன்பும் ஆகும். இந்த மூன்றும் அறுபத்து மூவருக்கும் பொதுவாகும். எனவே இதனைப் படிக்க வேண்டுமென்று