பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 31 வந்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களிடம் இன்முகம் காட்டி, இன்மொழி பேசி உபசரித்தார்’ என்று பொருள் கிடைக்கும். சமய மரபோடு ஒன்றியுள்ள இந்த விளக்கம் மிகச் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. இக்கருத்தை வலியுறுத்தப் பெரியபுராணத்தில் வரும் மற்றெரு பகுதியினையும் இங்கே காண்டல் வேண்டும். . நாதர் விரும்பும் அடியார்கள் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒன்றாகச் சேர்ந்தே பல தலங்கட்குச் சென்று வழிபட்டார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது. ஒருமுறை இந்த இரண்டு பெரியவர்களும் திருவிழிமிழலை என்ற ஊருக்குச் சென்றார்கள். அந்த ஊரில் அப்பொழுது பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கருதிய இந்த இரண்டு பெரியவர்களும், இறைவனிடம் முறையிட்டு தினந் தோறும் ஆளுக்கொரு பொற்காசு பெற்று இரண்டு மடங்களை நிறுவி, அந்த ஊர் மக்களின் பசிப் பிணியைப் போக்கினார்கள் என்று கூறுகிறது பெரியபுராணம். இரண்டு வேறு இடங்களில் மடம் நிறுவி, இறைவன் கொடுத்த பொற்காசால் உணவுப் பொருள்களை வாங்கிச் சமைத்துப்போடத் தொடங்கிய இவ்விரு பெருமக்களும் தண்டோரா மூலம் ஊர் மக்களுக்கு இதனை அறிவித்தார்களாம். அதனைக் கூறவந்த சேக்கிழார், х -