பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 409 நினைக்கும்போது இந்த மூன்றில் ஓரளவு பயிற்சியும், தேற்றமும் இருந்தாலொழிய இதனை அநுபவிப்பது கடினம். ... < - - - . . . . . . . . இறையடியார்களின் வரலாறுகளைக் கூறும் காப்பியங்கள் தமிழில் மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் காணக்கூடிய ஒன்றாகும். அப்படிப்பட்ட இறையடியார்கள் வாழ்க்கையில் ஒரு பொதுத் தன்மையைப் பார்க்கலாம். அவர்கள் அனைவரும் குறிக்கோள் வாழ்க்கை வாழ்ந்தவர்கள்; இறையன்பு நிறைந்தவர்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. தொண்டு செய்திருக்கிறார்கள் பலர் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதேயாகும். அப்படி ஆனால் இந்த மூன்று இயல்புகள் ஏனைய அன்பர்களிடத்திலும் காணப்படுகின்றன. பெரிய புராணத்திலுள்ள அடியார்களிடத்திலும் காணப் படுகின்றன என்றால் பெரியபுராணம் எந்த வகையில் ஏனைய காப்பியங்களோடு உலக காப்பியங்களோடு மாறுபட்டது என்ற சிந்தனை தோன்றினால் அது நியாயமானதேயாகும். அங்கே தான் ஒன்றை மிக நுண்மையாக சேக்கிழார் கூறியிருப்பதை நாம் காண முடியும். உலக இலக்கியங்களில் காணப்படும் இறை. அடியார்கள் அனைவரும் இந்தப் பிறவி போய் நீங்க, இறைவனடியைச் சென்றடைய வேண்டும், அவனோடு இரண்டறக் கலக்க வேண்டும் அல்லது மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவ்ே தங்களுட்ைய வாழ்நாளைக்