பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 சேக்கிழார் தந்த செல்வம் கழித்தார்கள் என்பதை நாம் அறியமுடியும். இதனுடன் மாறுபட்டு, மோட்சத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனுடைய திருவடிகளைச் சேரவேண்டும் என்ற எண்ணங்கூடப் பெரிதாக இல்லாமல் இந்த உலகத்தில் இருந்தபடியே இறையன்பர்களுக்கு உதவுவதையே ஒரு பெரும் குறிக்கோளாகக் கொண்டு, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்று சேக்கிழார் சொல்கிறாரே அதுபோல இருந்தவர்கள் தான் இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களும். - இவர்களுடைய வரலாறுகளைப் படிக்கும்போது ஒன்றை நாம் காண முடியும், எந்த ஒரு அடியாரும் இறையருளைப் பெற வேண்டும், இந்தப் பிறவியை விட்டு அவனுடைய திருவடியைச் சென்று அடைய வேண்டும் என்று முயன்றதாக வரலாறு இல்லை. அதற்குமாறாக தாங்கள் எடுத்து ஒரு பணியை, ஒரு தீவிரமான குறிக்கோளாகக் கொண்டு அந்தக் குறிக்கோளுக்காகவே வாழ்ந்தவர்கள். அந்தக் குறிக்கோள் தடைபடுமேயானால் உயிரைவிட்டாவது தம் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்தார்களே தவிர எப்படியாவது இறைவன் திருவடியைச் சேரவேண்டுமென்று யாரும் முயன்றதாகத் தெரியவில்லை. ஆகையினால் பெரியபுராணத்தின் தனிச்சிறப்பு என்ன்வென்றால் யாரும் இறைவனை நாடிச் செல்லவில்லை. இன்னும் விரிவாக அழுத்தமாகக் கூறவேண்டுமானால்