பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 411 இவர்களை நாடித்தான் இறைவன் வந்திருக்கிறான். அவரவர்கள் வாழ்க்கையிலே கொண்ட குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பல சமயங்களில் தங்களுடைய உயிரையும் விட வேண்டி நேரிட்டது. உயிரை விட்டவர்கள் பலர் விட முயன்றவர்கள் பலர் என்பதைக் காண்கிறோம். அப்படி அவர்கள் அந்த இறுதி நிலைக்கு வரும்போது இறைவன் காட்சி தந்ததாக அவர்களைத் தம்மிடம் அழைத்துக் கொண்டதாகத்தான் பெரியபுராணம் பேசுமே தவிர இவர்கள் இறைவனை நாடிச் சென்று எனக்கு வீடு பேற்றைத் தா. இந்தப் பிறவி வேண்டாம் என்று சொல்லியதாக எந்த வரலாறும் இல்லை. - இதில் ஒரு வரலாறு கொஞ்சம் மாறுபட்டுக் காணப்படும். அதுதான் காரைக்கால் அம்மையார் உடைய வரலாறு. அவர்தான் இந்த உடம்பை விட்டு விட்டு இறைவனிடம் போகவேண்டும் என்று நினைக்கிறார். 'ஈங்குஇவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற - தசைப்பொதி கழித்து, இங்கு உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும். . . . - - - . . . . . . (பெ. பு-1770)