பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 சேக்கிழார் தந்த செல்வம் என்றுதான் கூறப்பெற்றிருக்கிறார்கள். சாக்கியர் வரலாற்றைப் பார்க்கிறோம். அவர் சிவனடியாராகக் கருதப்பெற்றார். அவர் சிவவேடம் தாங்கவில்லை. இனி சிவவேடம் தாங்கி தவறான வாழ்க்கை வாழ்ந்த முத்தநாதன் முதலானவர்களைப் பெரிய புராணத்தில் காண்கின்றோம். இப்பொழுது இந்த வேடம் எந்த அளவுக்கு அவர்களை சிவனடியார்கள் என்று முத்திரை குத்த உதவிற்று? இந்த முத்திரையை பெற அவர்களாக முன்வந்து செய்தது எதுவும் இல்லை. அவர்களைப் பார்க்கின்றவர்களுடைய பார்வையில்தான் அது இருந்தது. மெய்ப்பொருள் நாயனாரோ, ஏனாதிநாத நாயனாரோ எதிரே இருக்கின்றவன் பகைவன், தீயவன், தீய எண்ணத்தோடு வந்திருக்கிறான் என்பதை நன்றாக அறிந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அப்படி அறிந்திருந்தும் தங்களால் இதுவரை போற்றப்பெற்ற அந்தச் சிவ வேடத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தார்களே தவிர அந்தச் சிவவேடத்தை அணிந்தவன் யார் என்ற ஆராய்ச்சியில் அவர்கள் போகவே இல்லை. இது உலகத்தில் மற்ற இலக்கியங்களில் பார்க்க முடியாத ஒரு தனிச் சிறப்பாகும். எதிரே இருப்பவன் தீயவன், தன்னைக் கொல்ல வந்திருக்கிறான், தமக்குத் தீமை புரிய வந்திருக்கிறான் என்று தெரிந்தும்கூட அதுபற்றிக் கவலைப் படாமல் தாம் இதுவரையில் எந்தச் சிவவேடத்திற்கு ஒரு மரியாதை கொடுத்தார்களோ