பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி * 415 அந்தச் சிவவேடத்தை அவன் அணிந்திருக்கிறான் என்ற காரணத்தினால், அவன் என்ன செய்தாலும் lgil பற்றிக் கவலையில்லை, தங்களுடையلئے குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இன்றியமையாதது என்று கருதினார்கள் என்பதை பெரியபுராணம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது. பெரியபுராணத்தில் வருகிற இரண்டொருவர் ஒரு புதுவழியை மேற்கொண்டனர். தங்களுக்கு ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். அந்தக் கொள்கை சரியா தவறா என்று ஆராய யாருக்கும் உரிமையே இல்லை. ஏன் இறைவனுக்குக் கூட அந்த உரிமை இல்லை. ஆகவே தாங்கள் வகுத்துக் கொண்ட கொள்கைப்படி வாழ்ந்து வந்தார்கள். என்றாவது ஒருநாள் அந்தக் கொள்கைக்கு முட்டுப்பாடு வருமேயானால் உயிரை விடத் துணிகிறார்கள். அதுவரையில் சரி. அது பொதுத் தன்மைதான். இப்படியும் இரண்டொருத்தர் வாழ்க்கையில் இறைவன் திருவிளையாடல் புரிகின்றான். ஏயர்கோன் கலிக்காமர் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாக நிற்பவர். . . .' ...; எம்பிரான் எந்தை தந்தை தந்தைஎங் g . . தம்பிரான் நீரேஎன்று வழிவழிச் சார்ந்து வாழும் o,