பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 சேக்கிழார் தந்த செல்வம் அடியவர்கள் என்ற ஒரு எண்ணம் அவர் மனத்தில் எந்தக் காரணத்தினாலோ இருந்திருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. அதாவது வழிவழியாகத் தொண்டு செய்கின்ற தாங்களும் தங்கள் குடியும் இறையன்பில் தலை நிற்பவர்கள் என்ற எண்ணம் அவர்களுடைய மனத்தின் ஆழத்தில் இருந்திருக்கிறது. ஆகையினால் தான் இறைவன் கனவிடை வந்து இந்த வயிற்று வலியைச் சுந்தரன் வந்துதான் போக்க முடியும் என்று சொன்னவுடன் - மற்றவன் இங்குவந்து தீர்ப்பதன் முன்நான் மாயப் பற்றிநின் றென்ன நீங்காப்பாதகச் சூலை சூலை - தன்னை உற்ற இவ்வயிற்றினோடும் கிழிப்பன். -: ೯೯೯ಕp சொல்லுகின்ற அளவுக்கு அவருடைய துணிவு போய்விட்டது. இது ஏயர்கோன் சிறந்த பக்தர்; சிவனடியார் என்பதை உணர்த்துகிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. வழிவழியாகச் சிவனடியார் ஆனாலும் அந்த சிவனடியாாாக இருப்பதில் ஒரு கர்வம் கொண்டுவிட்டார் என்பதை نئے۔lgi/ அறிவிக்கின்றது. பேசுகிறவன் இறைவன். இவருடைய பக்தியையும், அன்பையும், அதே நேரத்தில் சுந்தரருடைய பக்தியையும், அன்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவகிைய இறைவன் இப்பொழுது சொல்கிறான். அவன் வந்து இந்த வயிற்றுவலியைத் தீர்ப்பான்’ என்று.