பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 417 ஆனால் ஏயர்கோன் என்ன நினைக்கிறார். பரம்பரையாக இறைவனுக்குத் தொண்டு பூண்டு வாழ்கிற தாங்கள் உயர்ந்தவர்கள். இறைவனே சென்று தடுத்தாண்டு கொண்டான் அந்தச் சுந்தரனை. அப்படிப்பட்ட சுந்தரன் தங்களைவிட ஒருபடி தாழ்ந்தவன் என்று நினைத்தார். அதைவிட மோசம் என்னவென்றால் இறைவன் ஆண்டான் என்றும் தாங்கள் அடிமை என்றும் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடவாமல், இறைவனைத் தோழமை பூண்டு தூது அனுப்புகிற அளவுக்கு தாழ்ந்துவிட்டான் சுந்தரன்; என்றும் நினைத்தார். எனவே அப்படிப்பட்ட சுந்தரன் வந்து தன் வயிற்று நோயைத் தீர்ப்பதைவிட இறந்து போவதே மேல் என்று நினைக்கிறார் என்றால் அந்த உறுதிப்பாடு, கொண்ட கொள்கையில் நிற்றல் என்பதெல்லாம் போற்றத் தகுந்ததுதான், மறுப்பதற்கில்லை. ஆனாலும் ஆழ்ந்து நோக்கினால் அவர் வயிற்றை கிழித்துக் கொள்ளும் அளவுக்கு ஏன் இறைவன்விட்டான் என்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் ஓர் உண்மை விளங்கும். ஏயர்கோனுடைய பக்தியில் ஒரு சிறு ஒச்சம் இருக்கிறது. அகங்காரம், மமகாரமற்று அடியாராக வாழ்வதைவிட்டு, நாங்கள் தான் உயர்ந்தவர்கள். நீ போய் ஆட்கொண்ட சுந்தரன் எங்களைவிட ஒரு படி கீழே: என்று நினைக்கின்ற போது அந்த அகங்காரம் தலைதூக்குகிறது. ஆகையால் அதற்குரிய தண்டனையாகத் தான் அவர் வயிற்றைக் கிழிக்கும்படியாக ஏற்பட்டது