பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 சேக்கிழார் தந்த செல்வம் என்பதும் பெரியபுராணம் காட்டுகின்ற ஒரு சிறந்த அடிப்படையாகும். இனி இவர்கள் செய்த தொண்டுகளை எல்லாம் பார்ப்போமேயானால் திருக்கோயில் பணி செய்தவர்கள் உண்டு பெரியபுராணத்தில். யாரும் இல்லையென்று சொல்வதற்கில்லை. திலகவதியார் திருநீலநக்கர் புகழ்ச்சோழர் முதலானவர்கள் செய்து இருக்கிறார்கள். என்றாலும் நேரடியாகத் திருக் கோயில் தொண்டு செய்வதைவிட மக்கள் தொண்டு செய்தவர்களே அதிகமாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் அடியார்களுக்கு சட்டி கொடுத்தல், துணி கொடுத்தல், வேண்டுவனவற்றைத் தருதல், அன்னமிடுதல், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்று வரும்போது இவை எல்லாம் மக்கள் தொண்டின்பாற்படும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவிழிமிழலையில் பஞ்சம் தீரும் வரையில் அன்னமிட்டது எல்லாம் மக்கள் தொண்டின்பாற்படும். எனவே இந்தத் தொண்டு செய்வதில் ஓர் இன்பத்தைக் கண்டார்கள் இவர்கள். அவர்கள் பின்னே வந்த தாயுமானப் பெருந்தகை இந்த அருமைப்பாட்டை அறிந்து, அன்டர்பணி செய்யவெனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பரபரமே என்று சொல்கிறார். -