பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சேக்கிழார் தந்த செல்வம் காதலொடு தொழுது எடுத்துக் கொண்டு நின்று கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்க நாதர்விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திரு அமுது கறிநெய்பால் தயிர் என்று இன்ன ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்" (பெயு- 2469) என்ற பாடலில் மிக எச்சரிக்கையுடனும், நுண்மையான பொருள் விளங்கவும் பாடியுள்ளமை காணலாம். திருவிழிமிழலைப் பஞ்சம் சிவனடி யார்களைமட்டுமா தாக்கிற்று? அவ்வூரில் உள்ள அனைவரையும் தாக்கிற்று. அப்படியானால் இந்த இரு பெருமக்களும் சிவனடியார்கள் மட்டும் வந்து உண்க என்று சொல்லியிருப்பார்களா? உலகில் உள்ள உயிர்கள் எண்பத்துநான்கு இலட்சம் வகைப்படும் என்று பாடிய காழிப்பிள்ளையார் இறைவன் அவை அனைத்தையும் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே உறைகின்றான் என்று கூறியுள்ளார். உறைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் என்று தொடங்கும் திருவிழிமிழலைப் பாட்டாகும் இது. அப்படியிருக்க, அதே திருவிழி மிழலையில் காழிப்பிள்ளையார் சிவனடியார்கள் மட்டும் வந்து உண்க என்று பறையறிவிப்பாரா என்பது சிந்தனைக்குரியது. இந்தச் சிந்தனை