பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 419 இந்த மக்கள் தொண்டே அவர்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும், வீடுபேற்றைத் தருவதற்கும் கருவியாக அமைந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. அதைவிட இந்தத் தொண்டு செய்வதில் இன்று கூடப் பலர் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னமிடுகிறார்கள். பலர் அறச்சாலை கட்டுகிறார்கள். திருக்கோயில் கட்டுகிறார்கள். அப்படி இருக்க இவர்களை விட பெரியபுராணத்தில் வருகிறவர்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் என்ற வினா நியாயமான வினாவாகும். இங்கே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. * - -- இன்றும் அன்னம் இடுகிறவர்கள் உண்டு. ஏனைய அறங்கள் செய்கின்றவர்கள் உண்டு. இந்த அறம் எப்படி நடைபெறுகின்றது? தன்னை மாறி இருக்க உள்ள தடங்கள் கொண்டே செய்யப் பெற்றனவா? இளையான்குடிமாறனார் வரலாற்றில்சொல்வார், நிறைந்த செல்வத்தோடு இருக்கின்ற வரையில் அவர் அன்னம் இட்டார். எல்லாம் கொடுத்தார். எல்லாம். சரி. ஆனால், - - - வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் என்று சொல்லுவார். இவ்வளவு செல்வம் மல்கிய போது அச்செயல்கள் செய்வது அன்றியும், அல்லல்