பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 சேக்கிழார் தந்த செல்வம் நல்குரவானபோதிலும் இச்செயல் செய்வார். அது தான் பெரியபுராணத்தின் நுணுக்கம். செல்வம் மல்கியபோது இவற்றையெல்லாம் செய்வது எளிதான காரியம். தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இதற்கெல்லாம் செலவிடுவது என்ற முடிவுடன்பாலாபிஷேகம் செய்கிறர்களும்-நூற்றுக்கணக்கான வர்களுக்கு அன்னமிடுபவர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆனால், செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வதன்றியும் மெய்யினால் அல்லல் நல்குரவான போதிலும் வல்லர் என்பது இளையான்குடிமாறனாரால்தான் செய்ய முடிந்தது. இளையான்குடிமாறனார் வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கூட்டி வந்து சோறுபோட்டு, வயிற்றை நிரப்பி, வேண்டிய துணிமணிகளைக் கொடுத்து அனுப்பினார்:சிந்தித்துப் பார்த்தால் சாதாரண சமாசாரம். இந்த சாதாரண சமாசாரத்தைச் செய்த இவர்கள் எப்படி அடியார்கள் ஆனார்கள் என்பதைப் பார்க்கும் போதுதான் உண்மை விளங்குகிறது. இவர்கள் இதைச் செய்ததினாலே மட்டும் அடியார்கள் ஆகிவிட வில்லை. இதைச் செய்வதற்கு முடியாத ஒரு சூழ்நிலை உருவானபோது செய்வதற்கு முடியாத வறுமைப் பதம் வந்தபோது, செய்வதற்கு முடியாத