பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 421 உடல் பிரச்சினை வந்தபோது செய்வதற்கு முடியாத குடும்பச் சூழ்நிலை உருவான போது என்ன செய்தார்கள்? அந்த நிலையிலும் அவர்கள் இதை விடாது செய்தார்கள். இந்தத் தொண்டுக்கு இடையூறு வரக்கூடிய சூழ்நிலை உருவானால் உயிரைவிட்டுத் தொண்டை நிலை நிறுத்தினார்களே தவிரஇப்பொழுது முடியாமல் போய்விட்டது-பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கவில்லை. ஆகையினால்தான் இவர்கள் அடியார்கள் ஆனார்கள் இதிலிருந்து பெரிய புராணத்திலுள்ள அடியார்களின் பொதுத் தன்மை நன்கு விளங்கும். அறிவைக் கொண்டு ஆராய்வது என்பது ஒருவகை உணர்வைக் கொண்டு ஆராய்வது என்பது ஒருவகை. பெரியபுராணத்தில் உள்ள அடியார்களின் வரலாற்றை அறிவுகொண்டு ஆராய்ந்தால் அவ்வளவு சரிப்பட்டு வராது. ஒருவர் விளக்கு எரிக்கிறார். அவர் எண்ணை வாணிகர். நிரம்ப வசதியுள்ள குடும்பம். கோயிலில் ஆயிரக்கணக்கான விளக்கு எரிக்கிறார். செல்வம் எல்லாம் போன நிலையிலும் விடாது விளக்கு எரிக்க வேண்டுமென்று நினைக்கிறார். அதற்காக புல்லரிந்து அதைக் கொண்டு வந்து விற்று அதில் கிடைக்கும் காசில் விளக்கு எரித்தார். பின்னர் செக்கு இழுக்கும் பணியாள் வேலைக்குச் சென்று பணம் சேர்த்து இதே பணியைச் செய்தார்.