பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 சேக்கிழார் தந்த செல்வம் இவ்வனைத்து முயற்சிகளும் தோற்று போகவே எதை வைத்து எரிப்பது என்ற நிலைமை வரும்போது, இனி நம்மால் இந்தத் தொண்டு செய்ய முடியாது என்று நினைக்கவில்லை, அங்கேதான் அவரது உறுதிப்பாடு வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட அடியார்கள் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்ட நிலைமையிலும்இந்தத் தொண்டை நிறுத்த மாட்டேன். நிறுத்தினால் உயிரை விட்டுவிடுவேன் என்றார்கள். இதை அறியாமை என்றா சொல்வது? அறிவினால் ஆராய்ந்து பார்த்தால் அப்படிக்கூடச் சொல்லலாம். ஆனால் அறிவினால் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் அடியார்கள் அல்லர். உணர்வினாலே தான் இவர்களை உணர முடியும். இறைவன் அறிவினாலே ஆராயப்படுபவன் அல்லன். உணர்வினாலே உணரப்படுபவன். ஆதலால் இந்த அடியார்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒரே வழி உணர்வினாலேதான் அவர்களை அறிய முடியும். அந்த உணர்வு நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்வோமேயானால் கணம் புல்லரோ அல்லது ஏனைய எந்த அடியாரோ செய்த செயலினுடைய அருமைப்பாட்டை விளங்கிக் கொள்ள முடியும். மிகச் சாதாரணச் செயலைக் கூட ஒரு மாபெரும் த்ொண்டாகச் செய்தார்கள். அது ஒன்று. - - இரண்டாவது இப்போ வசதி உடையவர்கள் அறஞ் செய்கிறார்கள். எப்படிச் செய்கிறார்கள்.