பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 சேக்கிழார் தந்த செல்வம் பெரியபுராணத்திலே அப்படிப்பட்ட பலருடைய வாழ்க்கையைச் சேகரித்து ஒன்றாகச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் ஓரளவு பெரியபுராணத்தை அநுபவிப்பதற்கு அது வாய்ப்பாக இருக்கும். இன்று பெரியபுராணத்தைக் கற்கின்ற நமக்கு தமிழ்நாட்டு வரலாறு என்று சொல்லப்பெறுகின்ற சில கருத்துக்கள் முரண்பாடாக இருப்பதைக் காண முடியும். சேக்கிழாரைப் பொறுத்தமட்டில் சில அரசர்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றார். சில அரசர்களைப் பற்றி பேரளவிலே சொல்லிச் செல்கின்றனர். சில அரசர்களைப் பற்றி கொஞ்சம் ஏசவும் செய்கின்றார். . மகேந்திரவர்மன் திருநர்வுக்கரசர் காலத்தில் இருந்தவன். அவருக்குத் தீங்கிழைத்தவன் என்ற கருத்தில், - பூபாலர் செயல்மேற்கொள் புலைத்தொழிலோன் என்று ஏசுவார். அதுபோல ஏசாவிட்டாலும் நின்றசீர் நெடுமாறனைப் பொறுத்தமட்டில் அவன் திருஞான சம்பந்தப் பெருமானால் நலம் பெற்றவன் என்ற கருத்தினாலேயும், மங்கையர்கரசியருக்கு கணவன் என்ற கருத்தினாலேயும் அதிகம் அவனைப் பற்றிக் குறைகூறாமல் விட்டுவிட்டார். அவருடைய வரலாற்றைத் தனியே பேசும்போது அவன் பாழில்,