பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 425 உழிஞம் முதலான ஊர்களில் வெற்றி கொண்டவன், நெல்வேலி வென்றவன் என்றெல்லாம் கல்வெட்டு களில் காணப்படுகின்ற அவனுடைய வெற்றிச் செய்தியை எடுத்துப் பேசுகின்றார். ஆனால் இந்த அளவு கல்வெட்டுகளைக் கற்றறிந்து அவருடைய புராணத்திலே பேசுகின்ற பெருமான் என்ன காரணத்தினாலோ இராஜசிம்மன் கட்டிய கைலாசநாதர் கோயிலைப் பற்றிச் சொல்லவே விட்டுவிடுகிறார். சேக்கிழார் காலத்திற்கு முன்னரே அது நடந்தது என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஏன் என்று ஆராய்ந்தால் சில உண்மைகள் வெளிப்படும். சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திற்கு முன்னரே கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. சுந்தர மூர்த்திகள் ஒவ்வொரு தலமாகச் சென்று வழிபட்டுக் கொண்டு வருகின்றவர் காஞ்சியில் வந்து பல திருக்கோயில்களையும் வழிபட்டு பிறகு கச்சி அநேகதங்காவதம் என்ற இடத்திற்குச் செல்கிறார். அது சிறிய கோயில், ஏறத்தாழ ஒரு விநாயகர் கோவில் அளவுக்குத் தான் அது இருந்திருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் நின்று மேற்குப் புறமாகத் திரும்பினால் கைலாசநாதர் கோயில் கண்ணில்படும். மாபெரும் சிறப்பு வாய்ந்த அந்தக் கைலாசநாதர் கோயில் சுந்தரர் காலத்தில இருந்ததுதான் அவருக்கு முன்னரே கட்டப்பட்டது தான். ஆனாலும் கச்சி அநேகதங்காவதத்தைப் பாடுகின்ற சுந்தரர் கைலாச நாதர் கோயிலைப் பாட