பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 427 ஒருவர் பாடி அதை உமாபதிசிவம் அருளியது என்று தலையில் எழுதிவிட்டார். ஆகவே அது இன்றைக்கு செலாவணி ஆகிக் கொண்டு வருகிறது. அந்த அத்தைப் பாட்டிக் கதையைத் தவிர வேறு எந்த விதமான சான்றும் இல்லை, இராஜராஜன் திருமுறைகளுக்குத் தொண்டு செய்தான் என்பதற்கு. இன்னும் சொல்லப்போனால் இராஜராஜனுக்கு 79 ஆண்டுக்கு முற்பட்டவனாகிய வைரமேகன் என்ற பல்லவ மன்னன் திருத்தவத் துறை கல்வெட்டில் பதிகம் பாடுகின்றவர்களுடைய பட்டியலை தந்து இருக்கிறான். . . . . . . - ஆகவே இராஜராஜன் ஒன்றும் புதியதாகச் செய்துவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த இராஜராஜன் தமிழ்ப் பற்றுக்கூட உள்ளவன் என்று சொல்வதற்கில்லை. பல்லவர்கள் எப்படி வடநாட்டில் இருந்து குருமார்களை வரவழைத்து யாகம் முதலியவற்றைச் செய்தார்களோ அதே போல இந்த இராஜராஜன்-சைவசமயத்து ஆறேழு பிரிவுகளில்ேகோளகீசைவம் என்கிற சைவப் பிரிவைச் சேர்ந்த சதுரானன பண்டிதன் என்ற பிராமணனைவடநாட்டு-பீகாரிலிருந்து வரவழைத்து அவனைத் தான் தம் குருவாக வைத்துக் கொண்டிருந்தான். அதனாலே இவனுக்குத் தமிழ்ப் பற்றோ, தேவாரங்களிலோ ஈடுபாடோ இருப்பதாகச் சொல்வதற்கில்லை. - . „ ~ . . . ."