பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 சேக்கிழார் தந்த செல்வம் அந்தச் சதுரானன பண்டிதன் தேவாரம் பாடுவதற்குக் கூட இங்கு இருக்கிறவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு தீட்சை செய்வித்து பிறகுதான் தேவாரம் பாட வைக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டும் இருக்கிறான் இராஜராஜன். கேட்டது மட்டுமல்ல. அவனுடைய பதிகம் பாடுவோர் கல்வெட்டில் பார்த்தோமேயானால் பதிகம் பாடுகின்றவர்கள் பெயர்ப் பட்டியல் வரும். அதிலே திருஞான சம்பந்தன் என்கிற அகோரசிவன், திருநாவுக்கரையன் என்கின்ற வாமதேவன் என்று வருவதைப் பார்த்தால் அகோரசிவன், வாமதேவன் எல்லாம் தீட்சா நாமங்கள். இந்தத் தீட்சா நாமத்தை ஏன் செய்தான் என்றால் சாதாரண தமிழர்களாக இருந்தவர்களுக்கு இந்தத் தேவாரம் பாடத் தகுதியில்லை. ஆகவே தீட்சை பண்ணி வைத்துத்தான் அவர்களைப் பாட வைக்க வேண்டுமென்று சதுரானன பண்டிதன் செய்திருக்கிறான். அதற்கு இந்த இராஜராஜன் தலையாட்டி பொம்மைபோல செய்திருக்கிறான் என்றால்-இவன் ஒன்றும் தமிழுக்குச் செய்யவில்லை என்பதும், அப்படி தமிழ்ப்பற்று உடையவன் அல்லன் என்பதற்கும் இதுவே சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இதனாலேதான் சேக்கிழார் பெருமான் சோழர்கள் என்று சொன்னாலேயே மிகுந்த ஈடுபாட்டோடு அவர்கள் பெருமையைப்பாடி வந்த அந்தப் பெருமான்-இந்த இராஜராஜனைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. எவ்வளவு பெரிய