பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 33 சேக்கிழாருக்கும் தோன்றியிருக்க வேண்டும். ஆகவே, மிக எச்சரிக்கையுடன் பாடியுள்ளதை மேலே காட்டி யுள்ளோம். ஞானசம்பந்தர் பறையறிவித்தார் என்று சொல்லவந்த சேக்கிழார், நாதர் விரும்பு அடியார்கள் வந்து உண்க’ என்றமைத்த சொற்றொடரின் நுணுக்கத்தைக் கவனிக்க வேண்டும் நாதர் விரும்பு’ என்பது வேற்றுமைத் தொகை எனப்படும். இத்தொடரை நாதனை விரும்பும் அடியார்கள் என்று இரண்டாம் வேற்றுமை விரித்தும் பொருள் கொள்ளலாம். நாதனால் விரும்பப்பட்ட அடியார்கள் என்ற மூன்றாம் வேற்றுமையிலும் பொருள் கொள்ளலாம். முதற் சொல்லை மிக நுணுக்கமாக "நாதன் என்றே பயன்படுத்துகிறார் சேக்கிழார். தலைவன் என்றே பொருள்படும் நாதர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் எல்லாச்சமயத் தவர்க்கும் பொதுவானதாக ஆகிவிடுகிறது. அவ்வச் சமயத்தவர்கள் அவரவர்கள் கடவுளர்களை (நாதனை) விரும்பும் அடியார்களாக உள்ளார்கள் என்பது ஒரு பொருள். இனி நாதன்' என்ற சொல்லுக்கு இறைவன் என்று பொருள் கொண்டால், தான் படைத்த உயிர்களிடத்துக் கருணை பூண்டுள்ளான் ஆதலின், நாதனால் விரும்பப்பட்ட என்ற பொருளும் கிட்டும். நாதனால் விரும்பப்பட்ட என்று பொருள் செய்யும்போது கடவுளை நம்ப வில்லை என்றாலும், படைக்கப்பட்ட காரணத்தால் இறைவன் அவர்களுக்கும் கருணை பாலிக்கிறான்