பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 சேக்கிழார் தந்த செல்வம் தெரிந்துக் கொள்வோமேயானால் உண்மையான வரலாற்றை எழுதுவதற்கு அது பெரும் உதவியாக இருக்கும் ஆக பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவர் ஆயினும் வரலாற்று அறிவு நிறைந்து இருந்தவர் ஆதலால் சேக்கிழாருடைய பெரிய புராணம் தமிழக வரலாற்றை அறிய பெரிதும் உதவுகிறது. இதுவரை கண்டவற்றை அமைதியாக இருந்து சிந்தித்தால் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். ஏனைய சமய நூல்கள்போல அதாவது தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், அஷ்டப்பிரபந்தம் முதலிய நூல்களைப் போல சமய அடிப்படையில், குறிப்பிட்ட சமயத்தை வளர்ப்பதற் காகவும், அதனுடைய பெருமையைச் சொல்வதற் காகவும், அதை நம்புகிறவர்கள் இறைவனுடைய திருவடியைச் சேர்வதற்குரிய வழியைக் காட்டுவதற் காகவும் அந்தச் சமய நூல்கள் பணிபுரிந்ததுபோல சேக்கிழார் நூல் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடியும் என்ன காரணத்தினாலோ பின்னால் வந்தவர்கள் இதை பன்னிரண்டாம் திருமுறை என்று சைவத் திருமுறைகளிலே சேர்த்தார்களே தவிர பெரியபுராணத்தின் அடிநாதமாக விளங்குவது, அதனுடைய குறிக்கோளாக விளங்குவது 6Ծ):9-6)յ சமயத்தை வளர்ப்பது என்பது முக்கியமாகத் தெரியவில்லை. சைவ சமய கொள்கையின் அடிப்