பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம்-இறுதிப் பகுதி 431 படையில் வாழ்ந்த அடியார்களைச் சொல்வது தான் பெரியபுராணம் என்பதை மறுப்பதற்கில்லை. சைவத்தின் பெருமையையும் பெரியபுராணம் பேசுகின்றது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அதைவிட முக்கியமாக பெரியபுராணம் எதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்றால் இந்தத் தமிழகத்தில் வாழுகின்ற மக்களைத் திருத்துவதுதான் அதனுடைய முக்கிய குறிக்கோளாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழினம் கீழே விழுகின்ற நிலையை அடைந்துவிட்டது. சோழர்கள் மறையப் போகின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதை அறிந்த சேக்கிழார் இந்தத் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்ட வேண்டும், குறிக்கோள், இறையன்பு, தொண்டு ஆகியவற்றை அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டத்தான் பெரியபுராணத்தை இயற்றின்ார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே சமய நோக்கத்தைவிட சமுதாய நோக்கம் தான் அவருடைய முக்கிய குறிக்கோளாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்வோமேயானால் தவறு ஒன்றும் இல்லை. இவ்வாறு சொல்வதனால் பெரிய புராணத்தினுடைய dßFLDIL] அடிப்படையையோ, நோக்கத்தையோ குறை கூறுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். சேக்கிழாரைப் பொறுத்த