பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 சேக்கிழார் தந்த செல்வம் மட்டில் தேவார திருவாசகங்களை நன்கு பயின்றிருந்தார் ஆதலால் சமயத்தை வளர்ப்பதற்கு இவை போதுமானவை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். புதியதாக ஒரு காப்பியத்தை இயற்றி அந்தச் சமயத்தை வளர்க்க வேண்டுமென்ற சூழ்நிலை தேவையே இல்லை. அது உருவாகவில்லை. ஆகவே தான் அவர் மக்களை நல்வழிப்படுத்தி ஒரு சிறந்த வாழ்க்கை உடையவர்களாகச் செய்தால் அது சமய வாழ்க்கைத் தானே அதனைத் தொடர்ந்து வரும் என்பதனை அறிந்திருந்தார். ஆகையால் பெரியபுராணத்தின் குறிக்கோளாக சமுதாய வளர்ச்சி-சமுதாயம் சிறந்த முறையில் முன்னேறிச் செல்வதைத் தம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதனை அறிந்து கொள்வோமேயானால் அது பெரிய புராணத்தை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். @@ó30@