பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 : சேக்கிழார் தந்த செல்வம் என்ற சிறப்புப் பொருளும் இதில் அடங்குவதைக் காணலாம். எனவே, திருஞான சம்பந்தப்பெருமான், பசித்து வந்தவர்கள் அனைவருக்கும் வேறுபாடு பாராட்டாமல் உண வளித்தார் என்று பொருள் கொள்ளும் முறையில், நாதர் விரும்பும் அடியார்கள் என்ற அற்புதமான தொடரைச் சேக்கிழார் பயன்படுத்துகிறார். சேக்கிழார் பாடிய பெரியபுராணம் உலக சமுதாயம் முழுவதற்கும் பொதுவான வாழ்க்கை வழி காட்டி நூல் என்பதை அறிவதற்கு இளையான்குடி மாறர் புராணத்தில் வரும் யாவராயினும் என்ற சொல்லும், திருஞானசம்பந்தர் புராணத்தில் வரும் நாதர் விரும்பு அடியார்கள் என்ற தொடரும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். காவிய நோக்கம் சேக்கிழார் காப்பியம் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட அமைந்திருப்பினும் அன்றைய தமிழகத்தில் புறத்தே வெளிப்பட்டும் அகத்தே மறைந்தும் நின்ற பல சமுதாயக் கேடுகளைச் சாடியிருப்பதைக் காணலாம். சமுதாயப்புரட்சி செய்ய விரும்புபவர்கள் இரண்டு வழிகளைக் கையாளலாம். சமுதாயக் குறைகளை நேரிடையாக எடுத்துக்காட்டி அவற்றைக் களைய வேண்டும் என்று கூறுவது ஒருவகை. அவ்வாறானால் அது நல்லொழுக்கம் கூறும் நீதி