பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 35 நூலாகமட்டும் அமைந்துவிடும். இரண்டாவது வழிகற்பவர் மனத்தில் முரண்பாடு ஏற்படாமல், கற்குமாறு வழி செய்து அதைக் கற்பதன்மூலம் இந்த உண்மைப் பொருள்கள் மனத்தில் சென்று தங்குமாறு செய்வதே ஆகும். கற்றோர்க்கு இதயம் களிக்கும் கவிதைகள் மூலம் ஒரு காப்பியத்தை அமைத்து யாவரும் அதை விரும்பிக் கற்குமாறு அமைத்து விடுகிறார் சேக்கிழார், சமுதாயக் குறைகளை நேரிடையாகச் சொல்லாமல் காப்பிய மாந்தர் போக்கிலேயே பல புரட்சிக் கருத்துக்களைப் போகிற போக்கில் புகுத்திவிடுவது சேக்கிழாரின் தனிச் சிறப்பாகும். சேக்கிழார் செய்த புரட்சிகள்: சாதி வேற்றுமை களைய சங்க காலத்தில் அதிகம் காணப்படாத சாதி வேற்றுமை 6ஆம் நூற்றாண்டுவாக்கில் தமிழகத்தில் பெரிதும் காலூன்றிவிட்டது. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று அந்நான்கு அல்லது குடியும் இல்லை (புறம் 335) வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் - - படுமே” (புறம்-183) என்ற புறநானூற்றுப் பாடல்கள் சங்க காலத்திலும் ஒரளவு இவை இருந்தன என்பதை அறிவிக்கின்றன.